இரு கைகளும் இல்லாத நிலையிலும் கால் விரல்களால் தேர்வெழுதி எம்.ஃபில் பட்டம் பெற்ற மாணவி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 24, 2016

இரு கைகளும் இல்லாத நிலையிலும் கால் விரல்களால் தேர்வெழுதி எம்.ஃபில் பட்டம் பெற்ற மாணவி

புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, மேடைக்கு வந்த மாணவி கோ.தாமரைச்செல்விக்கு எம்ஃபில் பட்டத்தை அளிக்க முயன் றார் விழாவின் சிறப்பு விருந்தினரான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் சி.திருச்செல்வம். பட்டத்தை வாங்காமல் அந்த மாணவி அமைதி காக்க, அரங்கத்தில் இருந்த வர்களுக்கு அதிர்ச்சி.

அப்போது, மேடைக்கு ஓடிவந்த அவரது தோழி, பட்டத்தை வாங்கினார். அப்போது தான் சபையினருக்குத் தெரிந்தது தாமரைச்செல்விக்கு இரு கைகளும் இல்லாதது. கரங்கள் இல்லாவிடினும் கால்களைக் கொண்டே தேர் வெழுதி தமிழகத்திலேயே முதன் முறையாக எம்ஃபில் பட்டம் பெற்றுச் சாதித்த அந்த மாணவிக்கு பலத்த கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித் தனர் அரங்கத்தில் இருந்தவர்கள்.

இதுகுறித்து மாணவி கோ.தாம ரைச்செல்வி ‘தி இந்து’விடம் கூறி யது: புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரத்தில் பிறவியிலேயே இரு கைகளும் இல்லாதநிலையில் பிறந்தவள் நான். தந்தை 10 ஆண்டு களுக்கு முன்பும், தாய் 5 ஆண்டுகளுக் கும் முன்பும் இறந்துவிட்டனர்.

இளநிலை தமிழ் பட்டப்படிப்பை புதுக்கோட்டையில் தனியார் கல் லூரியில் படித்தேன். ஆசிரியர் பணி என்பது எனது லட்சியம். கோவை அரசு கல்வியியல் கல்லூரியில் பி.எட். முடித்தேன்.

முதுநிலை பட்டத்தையும் படித்தேன். எம்ஃபில் படித்தால் கல் லூரியில் வேலை கிடைக்குமென் றார்கள். இப்போது அதிலும் பட்டம் பெற்றுள்ளேன். இதற்கிடையில், நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன்.

தற்போது பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பை படித்துக் கொண்டிருக்கி றேன். அனுபவச் சான்று இருந்தால் தான் வேலை என்கிறார்கள்.

கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தகுதியிருந்தும், அதை மறந்துவிட்டு என்னை ஒரு மாற்றுத் திறனாளியாகவே இச்சமூகம் பார்ப் பதாக நினைக்கிறேன். அரசுக் கல் லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணியோ, தனியார் கல்லூரி விரி வுரையாளர் பணியோ கிடைத்தால் எனது லட்சியம் நிறைவேறும் என் றார்.

தொடர்புக்கு: கோ.தாமரைச் செல்வி 95854 81495, பிஎச்.டி வழி காட்டி உதவி பேராசிரியர் சு.மாதவன்: 97513 30855.

No comments:

Post a Comment