துணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மெயின் தேர்வு 29-ம் தேதி தொடங்குகிறது: 3,815 பேர் எழுதுகின்றனர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 27, 2016

துணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மெயின் தேர்வு 29-ம் தேதி தொடங்குகிறது: 3,815 பேர் எழுதுகின்றனர்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் மட்டுமே நடத் தப்பட உள்ள இத்தேர்வில் 3,815 பேர் பங்கேற்கின்றனர்.

துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 74 காலியிடங்களை நிரப்பும் வகையிலான டிஎன்பி எஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு ஜூலை 29 முதல் 31-ம் தேதி வரை சென்னையில் மட்டும் நடத்தப்பட உள்ளது.

38 தேர்வுக்கூடங்கள்

எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி, சைதாப் பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட 38 தேர்வுக்கூடங்களில் 3,815 பேர் தேர்வு எழுத உள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜயகுமார் தெரிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகலாம்

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்து நேர் காணலுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

பதவி உயர்வு

குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஐஏஎஸ் அதிகாரியாகவும், டிஎஸ்பி பணியில் சேருவோர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறமுடியும். அவர்கள் தமிழ்நாடு கேடரிலேயே தங்கள் பணியைத் தொடரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment