தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 27, 2016

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தர்மபுரியில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவ–மாணவிகள் 2016–2017–ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தமிழக அரசின் ஸ்காலர்ஷிப்ஸ் என்ற புதிய இணையதள முகவரியில் புதிதாக விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு வருகிற 31.10.2016 வரை காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் 2½ லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். புதிய இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மாணவ–மாணவிகளின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களை இணைத்து அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் 31.10.2016–க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் தகுதியுள்ள விண்ணப்பங்களை தேர்வு செய்து கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். இந்த உதவித்தொகையை பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் விவேகானந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment