ஆகஸ்ட் 2... எந்தெந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை தெரியுமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 31, 2016

ஆகஸ்ட் 2... எந்தெந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை தெரியுமா?

ஆகஸ்ட் 2...
எந்தெந்த  மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை தெரியுமா?

👉🏼கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை

👉🏼காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 13ம் தேதியன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

👉🏼கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

👉🏼இதே போன்று ஆகஸ்ட் 5 ம் தேதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

👉🏼 கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 2ம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை

👉🏼 மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பொருந்தாது
இவ்விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் 6ம் தேதியன்று (சனிக்கிழமை) இம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் உள்ளூர் விடுமுறையான 2ம் தேதியன்று அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். மத்திய அரசு அலுவலகங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

No comments:

Post a Comment