தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 29, 2016

தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

தேசியக் கொடியை, மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மூலம் தயாரித்து பயன்படுத்தக் கூடாது.
அரசு அறிவிப்பின்றி, அரை கம்பம் அல்லது முக்கால் கம்பத்தில், பறக்க விடக் கூடாது. இரவு நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.

தேசியக் கொடிக்கு சரியான முறையில், 'சல்யூட்' செய்தல் வேண்டும்.
கொடியின் மேல்பக்க காவி நிறத்தை, உள்நோக்கத்துடன் தலைகீழாக பிடித்தல், தரையில் மண் படும்படி இழுத்தல் கூடாது. பழைய சாயம் போன, கிழிந்த கொடியை பயன்படுத்த கூடாது.
கொடியை தங்கள் உடையின் ஒரு பகுதியாகவோ, இடுப்பு கீழ் அணியும் உடையாகவோ, ஆபரணம், அலங்காரமாகவோ பயன்படுத்த கூடாது.
இந்த விதிகளை பின்பற்ற, மாணவர்கள், பள்ளி, கல்லுாரி ஊழியர், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்க, சட்டத்தில் இடம் உள்ளது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment