B.Ed. படிப்புக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 31, 2016

B.Ed. படிப்புக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

தமிழகத்தில் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகின்றன என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
இவற்றில் பி.எட். படிப்பில் 1,777 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர நாளை (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவங்களை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குமாரப்பாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் காந்தி நகர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், சேலம் பேர்லாண்ட்ஸ் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வஉசி கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி,திருவட்டாறு ஆத்தூர் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி ஆகிய இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி வரை தினமும் (சனி, ஞாயிறு உள்பட) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment