அரசுப் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை: அமைச்சர் பெஞ்சமின் விளக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 29, 2016

அரசுப் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை: அமைச்சர் பெஞ்சமின் விளக்கம்

எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை.அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில்அதிகமான மாண வர்கள் சேர்ந்துள்ளனர் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில்,

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, ‘‘தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதனால் பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேராததற்கு என்ன காரணம் என்பதை அரசு கூற வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் பி.பெஞ்சமின்பேசியதாவது:தமிழகத்தில் 24 ஆயிரத்து 103 தொடக்கப் பள்ளிகள், 7 ஆயிரத்து 219 நடுநிலைப் பள்ளிகளில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 995 மாணவர்கள் படித்து வருகின்றனர். தேவை உள்ள இடங்களில் 209 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.கடந்த 5 ஆண்டுகளில் 328 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இருப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளிகளி்ல் ஆங்கில வழி கற்பித்தல் தொடங்கப்பட்டதால், கடந்த 2014-15ல் ஆங்கில வழியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 78 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மலைப் பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாவலருடன் கூடிய வாகனங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இந்த வகையில் 10 ஆயிரத்து 229 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதுதவிர ஆயிரக்கணக்கான பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. எந்த பள்ளியும் மூடப்படவில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment