10-ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 28, 2016

10-ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த மார்ச்/ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு கடந்த ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

முடிவுகளை   www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவெண்ணையும், பிறந்த தேதி குறித்த விவரங்களையும் கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் போதே தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலங்களில் வரும் ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment