கால்நடை மருத்துவம்: 19 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 15, 2017

கால்நடை மருத்துவம்: 19 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 19 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மர்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி) படிப்புக்கு 320 இடங்கள், உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
விண்ணப்பம்: இந்தப் படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, அதனைப் பிரதி எடுத்து தேர்வுக்குழுவுக்குத் தபாலில் அல்லது நேரில் சமர்ப்பிக்க திங்கள்கிழமை கடைசியாகும்.
இணையதளத்தில் 23 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர். திங்கள்கிழமை மாலை 6 மணி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்பதாலும், கடைசி நாளில் அதிக அளவில் தபாலில் விண்ணப்பங்கள் வந்துள்ளதாலும், விண்ணப்பங்களைக் கணக்கிடும் பணிகள் செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிக்கின்றனர். இதுவரை 19,749 விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால், கடந்த ஆண்டுகளைவிட அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டில் சுமார் 18 ஆயிரம் பேர் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

No comments:

Post a Comment