பள்ளிகள் நாளை(ஜூன் 7)திறப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 6, 2017

பள்ளிகள் நாளை(ஜூன் 7)திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை (ஜூன் 7) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே, இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில், ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன், 1ல் பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால், விடுமுறை காலம், ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்றுடன் கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது; நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, நாளையே இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment