தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 6, 2017

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: கேரளாவில் கடந்த மே மாதம் 30ம் தேதி துவங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது டெல்டா மாவட்டங்கள் அடங்கிய தமிழக பகுதியில் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தமிழகத்தின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக பாபநாசத்தில் 14 செ.மீ., மழையும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2, 3 நாளில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் துவங்க கூடிய சாதகமான சூழல் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment