சி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 30, 2017

சி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க,
நவ., ௧௫ வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளில், ௧௦ம் வகுப்பு முடித்து, பிளஸ் ௧ படிக்கும், வீட்டில் ஒரே பெண் குழந்தையாக உள்ள மாணவியருக்கு, சி.பி.எஸ்.இ., சார்பில்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், ௨௦௧௬ல், பத்தாம் வகுப்பு முடித்த மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, www.cbse.nic.in என்ற இணையதளத்தில், நவ., 15 வரை பதிவு செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. அதற்கான சான்றிதழ்களை, நவ., ௩௦க்குள் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment