டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 28, 2017

டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் துவக்கம்

டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் துவக்கம்
இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம்.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. 
 முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment