மதுரை காமராஜ் பல்கலை பி.எட்., படிப்பு உடனடி சேர்க்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 24, 2017

மதுரை காமராஜ் பல்கலை பி.எட்., படிப்பு உடனடி சேர்க்கை

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:
இப்பல்கலை தொலைநிலை கல்வி சார்பில் பி.எட்., உடனடி மாணவர் சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 -2019 ஆண்டு சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ளவர்களுக்கு அக்., 26, 27 மற்றும் அக்.,30 முதல் நவ.,3 வரை உடனடி சேர்க்கை நடக்கிறது.

நுழைவு தேர்வு இல்லை. ஆசிரியர் பணி அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து சான்றிதழ்களுடன் அறிவிக்கப்பட்ட நாட்களில் காலை 10:00 - மதியம் 3:30 மணிக்குள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு www.mkudde.org என்ற இணைய தளம் அல்லது இயக்குனர் (பொறுப்பு) கலைச் செல்வனை 98657 32822ல் தொடர்புகொள்ள
லாம், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment