தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து
உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் குறித்தும், அதனை இடிப்பது குறித்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
கட்டிடம் இடிந்து விழுந்து இனியும் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்று தமிழக அரசின் அனைத்து துறைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து துறை செயலர்களுக்கு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment