கன மழையினால் ஏற்படும் பாதிப்பு குறித்து 1077 என்ற கட்டணமில்லா
எண்ணில் புகார் அளிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பருவமழை பாதிப்பு பற்றிய தங்களது குறைகளை பற்றி 1077 என்ற கட்டணமில்லா எண் வழியே புகார் தெரிவிக்கலாம். மேலும் 044-27664177, 27666746 என்ற எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.
இதுபோன்று சென்னையிலும் மக்கள் மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913, 044-2536 7823, 044 2538 4965, 044 2538 3694, 044 2561 9511, 044- 2561 9206 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment