தஞ்சை, அக். 27: மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தி தஞ்சையில் 2ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் மாநாடு நடக்கிறது. இதுகுறித்து தஞ்சையில் தமிழ்நாடு மாணவர் இயக்க பொது செயலாளர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வு உட்பட அனைத்து அகில இந்திய நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விளைபொருட்களின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அறிவியல் பூர்வமான இலவச கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தாய்மொழி வழி கல்வியை போதிக்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் கல்வி உரிமை, காவிரிப்படுகை என்ற தலைப்பில் மாணவர் மாநாடு வரும் 2ம் தேதி நடக்கிறது.
அன்றைய தினம் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து ஜான் வின்சன்ட் தலைமையில் பேரணி நடக்கிறது. இதைதொடர்ந்து தஞ்சை ராமநாதன் பஸ்ஸ்டாப் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கல்வி எமது சிறப்புரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. பின்னர் காவிரிப்படுகை எமது தாய் நிலம் என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடக்கிறது என்றார்.
No comments:
Post a Comment