பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று ஜூலை 4 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய பாடத்திட்ட வரைவு பள்ளிக்கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
www.tnscert.org என்ற இணையதளத்தில் புதிய பாடத்திட்ட வரைவை முதலமைச்சர் வெளிட்டார்
இணையதளத்தில் வரைவு பாடத்திட்டங்கள் பற்றி 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
முதல் கட்டமாக இந்த ஆண்டு 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாடதிட்டம் மாற்றம் செய்யப்படுகிறது
அதைத்தொடர்ந்து அடுத்தாண்டு 2,7,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது
மேலும் 2020-2021ம் ஆண்டு 3,4,5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும்
No comments:
Post a Comment