குழந்தைகளுக்காக நரிகுறவர்களின் மொழியை கற்று அந்த குழந்தைகளின் அறிவை வளர்த்து வரும் அற்புதமான ஆசிரியர் கீதா - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 20, 2017

குழந்தைகளுக்காக நரிகுறவர்களின் மொழியை கற்று அந்த குழந்தைகளின் அறிவை வளர்த்து வரும் அற்புதமான ஆசிரியர் கீதா

கனிந்த இதயங்கள் சிறுதுளி வெளிப்பாடு :

திருமதி.Shyamala Krishnamoorthy அம்மாவின் ஆசிர்வாதத்தில் அடுத்த தமிழகத்தின்
சிறந்த ஆசிரியருக்கான விருது பெற போகின்றவர்.....

தமிழகத்தில் நான் பார்த்து வியந்த ஒரு சாதனை பெண் ஆசிரியர் பற்றிய சிறிய கட்டுரை....(குழந்தைகளுக்காக நரிகுறவர்களின் மொழியை கற்று அந்த குழந்தைகளின் அறிவை வளர்த்து வரும் அற்புதமான ஆசிரியர்)

ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும்  ஆசிரியரைப் பொறுத்துத்தான் கல்வியில் அப்பிள்ளை காட்டும் ஆர்வமும் முன்னேற்றமும் வளர்ச்சியும் தங்கியிருக்கும்....

முதல் பயணம்..

ஒரு நாள் மதியம்  சத்துணவு  இவர்  பார்க்கும் முறை. உணவு வாங்கும் வரிசையில்  இவர் வகுப்பு (3) மாணவன்  தட்டு கூட இல்லாமல் ஒரு தேக்கு இலையை பறித்து உணவு வாங்கி அதனின் சூடு பொறுக்காமல் அவனின் கலங்கிய நிலை கண்டு இவரது மனம்  இளகி போனது  உடனே அவர் வகுப்பு  செல்வங்களுக்கு அழகிய lunch boxes   வாங்கி கொடுத்தார்...

இந்த பள்ளி  மாணவர்கள் அனைவரும் நரிக்குறவினர், மலையாள சோதிடர்கள், ஆதிதிராவிடர், பழங்குடி இருளர்கள். இவர்கள் திருவிழா சமயத்தில் ஊசி,பாசி விற்க, சோதிடம் பார்க்க குடும்பத்துடன் சென்று விடுவர்.எனவே  drop outs அதிகமாக இருந்தது


இதனை குறைக்க என்ன வழி என்று யோசித்து இவர்  கண்டு பிடித்தது தான் full attendance price for every month.இதன் மூலம் இடைநிற்றல் வெகுவாக குறைந்துள்ளது...குழந்தைகள் விடுப்பு எடுக்காமல் ஆர்வமாக பள்ளிக்கு வர தொடங்கினார்கள்...ஒவ்வொரு மாதமும் இவர் தன் சொந்த செலவில் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி வருகின்றார்....


ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும்.....

நரி குரவர் குழந்தைகள் படிப்பில் பின் தங்கி இருந்தனா்...அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற அந்த குழந்தைகளிடம் நரி குரவர்கள் மொழியை கற்றுக்கொண்டு இவர் அவர்களது மொழியில் பேச குழந்தைகள் ஆங்கிலத்தை எளிதாக கற்க தொடங்கிவிட்டனர்...(வீடியோ இணைப்பை பார்க்க Geetha Sadeesh இவரது முகநூலில் பார்க்கவும்)

அனைத்து பழங்குடி குழந்தைகளையும் ஆங்கிலத்தில் அழகாக பேச வைக்கின்றார்...
கற்பிக்கும் நேரத்திலே முக மலர்ச்சியுடன் கற்பிப்பவரே சிறந்த ஆசிரியர்...அதற்கு உதரணமாக திகழ்பவர் இந்த ஆசிரியர்...
இவர் மாணவர்கள்  அனைவருமே brother,(சகோதரர்கள்) sister (சகோதரிகள்) என்று  அழைக்க பழக்கபடுத்தி உள்ளார்...
Can I go to toilet? Can I drink water? என்று தான் இவரது அனைத்து மாணவர்களுமே கேட்க சொல்லி கொடுத்துள்ளார்....
Sorry  சொன்னால் It's Ok என்பதும்,அவர்கள் கைத்தட்டல் பெறும் போது THANK U TO ALL , அதற்கு கைத்தட்டியவர்கள் Welcome brother or sister  என்பதும் இவர் மாணவர்களுக்கு நல்ல பண்பை கற்று கொடுத்து வருகின்றார்...
குழந்தைகளின் நல்ல செயல்பாடுகள்  பெற்றோர்களுக்கே மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்களுக்கு பரிட்சை வைத்து நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களை பாராட்டி ஊக்கபடுத்தி பரிசுகள் வழங்கி வருகின்றார்..இதனால் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்...பல உதவிகள் ஏழை குழந்தைகளுக்கு செய்து வருகின்றார்...
இவரது மாணவர்களுக்கு கண் கட்டி வித்தை மூலம் மாவட்டங்களை எளிமையாக கூறி மாணவர்கள் விரும்பி  படிக்க இவர் பல முறைகளை செயல்படுத்துகின்றார்....

இவரது மிக சிறந்த பேச்சாளார்...எனவே குழந்தைகளை மேடை பேச்சளராகவும் உருவாக்கி வருகின்றார்...

இந்த ஆசிரியர் 5 மார்க் குறைந்ததால் டாக்டர் படிக்க முடியவில்லை எனவே Anna University engineering படிக்க கிடைத்தும் செல்லாமல் ... நான் ஆசிரியராக சென்று மாணவர்களை அதிக மதிப்பெண் பெற்று சாதனையளராக உருவாக்க"வேண்டும் என்று செயல்படும் சாதனை ஆசிரியர்...
(இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இவரை பற்றி)...
இவ்வாறு நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமுமாக இவரது வகுப்பறை வாசனையாகி சுகந்த நறுமணத்தை வீச வைக்கும் இந்த சகோதரியின் பெயர்

       வீ.கீதா.
  ஊ.ஒ.ந.நிலை. பள்ளி,
  பெண்ணாடம்( மேற்கு).
நல்லூர்( ஒன்றியம்).
கடலூர்(மாவட்டம்).


இளமையில் கல்வி சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment