உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்குபணி மாறுதல் கலந்தாய்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 6, 2017

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்குபணி மாறுதல் கலந்தாய்வு

தமிழகத்தில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல்வழங்குவதற்கான கலந்தாய்வுக்கு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 2017-18ம் கல்வி ஆண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பணி மாறுதல், அதனை தொடர்ந்து பொதுமாறுதல் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்காக அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களிடம் இருந்து இன்று (6ம் தேதி) முதல் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குவதற்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
 11ம் தேதி மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலும், 12ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலும் வெளியிடப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment