உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
நாமக்கல்லில் முட்டை உற்பத்தி குறைவு மற்றும்
தேவை அதிகம் காரணமாக முட்டை விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வரலாறு காணாத விலை அதிகரிப்பு இது என வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் இது வரை அல்லாத வகையில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. தற்போது ஒரு முட்டையின் விலை 9 பைசா அதிகரித்து 4 ரூபாய் 41 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
முட்டையின் தேவை அதிகரித்து வருகிறது, அதே சமயம் அதன் உற்பத்தி குறைந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாமக்கலில், முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 6 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.32 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முட்டை கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டு அடுத்து வெளிமார்க்கெட்டில் ரூ.4.44 வரை விலை விற்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஏழை மக்களுக்கு சாதாரணமாக கிடைக்கும் மலிவான சத்துள்ள பொருளாக இருந்த முட்டையின் விலையும் எட்டாத உயரத்திற்கு சென்றுள்ளது.
No comments:
Post a Comment