ழ எப்படி உச்சரிக்கணும் தெரியுமா? யு டுயூப்பில் கற்றுக்கொடுத்த மா. நன்னன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 7, 2017

ழ எப்படி உச்சரிக்கணும் தெரியுமா? யு டுயூப்பில் கற்றுக்கொடுத்த மா. நன்னன்

சென்னை: தமிழின் சிறப்பு எழுத்தான 'ழ' எப்படி உச்சரிப்பது என்று கற்றுக்கொடுத்தவர் முனைவர் மா. நன்னன். அவரது கற்பித்தல் முறை இன்றைக்கும் யு டுயூப் மூலம் மக்களை சென்றடைகிறது.

முதுபெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் மா. நன்னன் வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் கற்பித்துள்ளார்.

இவர் நடத்தும் தமிழ்ப் பாடம் பிரபலம், பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக. ஏதோ எதிரில் நின்று பாடம் நடத்துவது போல 'ம்...பக்கத்துல பார்த்து எழுதக் கூடாது' என்பார். 'ம்...எச்சல் தொட்டு சிலேட்டை அழிக்கக் கூடாது' என்பார்.

எங்க உச்சரிக்க ஆ.... அப்படித்தான் என்று கூறுவார். அதுவும் தமிழின் சிறப்பு எழுத்தான 'ழ' என்ற எழுத்தை எப்படி உச்சரிப்பது என்று அவர் கற்றுக்கொடுத்த பாணியே தனிதான்.

அவரது தமிழ் பாடங்கள் யு டுயூப்பிலும் பிரபலம். இன்றைய இளம் தலைமுறையினர் தமிழை கற்றுக்கொள்ளும் வகையே எளியபாணியில் பாடங்களை நடத்தியுள்ளார் மா. நன்னன்.

Click Here

No comments:

Post a Comment