மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது.
இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்து வகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில், பள்ளிகள் சார்பில், புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த, 40 பள்ளிகள், ஆன்லைன் மூலமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய, அனைத்து மாவட்டங்களிலும், குழு அமைக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி உட்பட, 10 பேர் கொண்ட குழு, 30ம் தேதிக்குள் ஆய்வு செய்து, இணையதளத்தில் தகவல்களைபதிவேற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment