ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 18, 2017

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு

வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும்,
ஒரு லட்சம் இன்ஜினியரிங் இடங்கள் குறைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும், 10 ஆயிரத்து, 360 இன்ஜி., கல்லுாரிகளில், 37 லட்சம் இன்ஜினியரிங் இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
ஆனால், பெரும்பாலான கல்லுாரிகளில், 60 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அதனால், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு, நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கப்பட்ட கல்லுாரிகளை மூட, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. அதனால்,
ஆயிரக்கணக்கான கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், மாணவர்களை சேர்க்க, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.எனவே, வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும், ஒரு லட்சம் இன்ஜினியரிங் இடங்கள் குறையும் என, ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment