கூகுள் குரோம் தேடுபொறிக்கு போட்டியாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் 'ஜியோ ப்ரெளசர்' என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ப்ரெளசிங் ஆப் இந்தியப் பயனாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோம் உள்ளிட்ட மற்ற ப்ரெளசர்களை போன்றே செய்திகள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி என மக்களைக் கவரும் வகையில் ஜியோ ப்ரெளசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ப்ரெளசரை உபயோகப்படுத்த ஆண்ட்ராய்டு போன்களுக்கென பிரத்யேகமாக மொபைல் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது. 4.8MB அளவு கொண்ட இந்த ப்ரெளசரை கூகுள் ப்ளே மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த ஜியோ ப்ரெளசர் 8 இந்திய மொழிகளை அங்கீகரிக்கும்.
அதன்படி தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகள் அடங்கும். இந்த ஆப் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் அதற்கும் அதிகமான திறன் கொண்ட செல்போன்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment