அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கையை டிவியில் ஒளிபரப்ப உத்தரவு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 10, 2019

அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கையை டிவியில் ஒளிபரப்ப உத்தரவு!!!

அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கையை டிவியில் ஒளிபரப்ப உத்தரவு

அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை தொடர்பான விளம்பரங்களை டிவியில் விளம்பரம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி ,யூகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து அனுப்பி உள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அரசு ஆணையிட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் துவக்கப்படும் எல்கேஜி யூகேஜி வகுப்புகளில் பாடம் நடத்துவதற்கு அந்தந்த ஒன்றியங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி இடத்துடன் பணி நிரவல் செய்ய வேண்டும்.

பெண் ஆசிரியர்கள் இல்லாவிட்டால் ஆண் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் முறைப்படி பணிநிரவல் செய்து அளித்துள்ளனர். ஒரு சில மாவட்டங்களில் முறையாக விபரங்கள் அளிக்கவில்லை. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யூகேஜி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவக்கப்பட வேண்டும். எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும். இந்த பெயர் பலகையில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறுகின்றன என்பதை குறிப்பிட வேண்டும்.

எல்கேஜி யுகேஜி வகுப்புகள் நடைபெறுவது குறித்து விளம்பரங்கள் வெளியிட வேண்டும். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்டத்தில் எந்த பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் உள்ளன என்ற விபரத்தை செய்தித்தாள் மற்றும் டிவிகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.

வரும் 18ம் தேதி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்களுடன் சேர்ந்து உள்ளூரில் உள்ள பொது மக்களை அணுகி எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு குழந்தைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும். அங்கன்வாடியில் மையத்தில் கட்டட வசதி, கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி போதுமானதாக இல்லாவிட்டால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள வகுப்பறை மற்றும் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ளவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

எல்கேஜி, யூகேஜி வகுப்பறையில் பாடம் எடுப்பதற்கு பணி நிறைவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பது மட்டும் செய்ய வேண்டும். அங்கன்வாடி பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் செய்வார்கள். பள்ளி வாரியாக எல்கேஜி மற்றும் யூகேஜி நடத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர் பட்டியலில் மாறுதல் செய்யக்கூடாது. இந்த ஆசிரியர்களுக்கு மாண்டிச்சேரி வகுப்புகளை நடத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. மேலும் வரும் 26ம் தேதி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment