சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில், ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. பகல் நேரத்திலும், குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை, பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னையில், 55 சதவீதத்துக்கும் மேல் மழை குறைந்துள்ளது. இதனால், வரும் நாட்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில், குளிரும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், சேலம் உள்ளிட்ட வடக்கு, வட கிழக்கு மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் சுற்றி உள்ள மலை மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கடும் குளிர் நிலவுகிறது.
வால்பாறையில், மிக அதிகமான குளிர் நிலவுவதால், தரையில் உறைபனி ஏற்படுகிறது. அங்கு, சராசரியாக, 5 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான வெப்பநிலையே பதிவாகிஉள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, ஆறு ஆண்டுகளுக்கு பின், சென்னையில், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. இதற்கு முன், 2012ல், ஜன., 17ல், அதிக குளிர் நிலவியதால், 17.7 டிகிரி செல்ஷியசாக வெப்பநிலை பதிவானது.
சென்னையின் புறநகர் பகுதிகளில், 18.2 டிகிரி செல்ஷியஸ் என்ற, குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. 'வரும் நாட்களை பொறுத்தவரை தொடர்ந்து குளிர் நிலவும்; வறண்ட வானிலை நீடிக்கும்' என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
No comments:
Post a Comment