10, 12ம் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ரூ.92 ஆயிரம் ஊக்கத்தொகை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 15, 2014

10, 12ம் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ரூ.92 ஆயிரம் ஊக்கத்தொகை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு ஆட்சியர் வி.கே. சண்முகம் ரூ. 92 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதித்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

அதன்படி பிற்படுத்தப்பட்ட 12-ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. 10-ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2, ஆயிரம், ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 31 மாணவர்களுக்கு ரூ. 92 ஆயிரம் ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் டி.செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்

ப. விஜயாம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment