தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15 புதன்கிழமை வெளியிடப்படுகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 14, 2014

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15 புதன்கிழமை வெளியிடப்படுகிறது.

நாளை 15/10/14 முதல் நவம்பர் 10-ந் தேதி வரை புதிய பெயர்களை சேர்க்கலாம். திருத்தம் செய்யலாம். ஜனவரி 5-ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது 1/1/2015 ஜனவரி தேதி அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்தால் மட்டுமே பெயர் சேர்ப்பு
புதிதாக சேர்ப்பவர்கள் மட்டுமல்ல வாக்காளர் அடையாள அட்டையில் பிழை இருந்தால் அதை திருத்துவதற்கும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்காக தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களுக்கு பொதுமக்கள் சென்றால் வரைவு வாக்காளர் பட்டியல் இருக்கும். அந்த பட்டியலைப்பார்த்து தங்கள் பெயர் சரியாக உள்ளதா? பிறந்த தேதி சரியாக உள்ளதா? பால் இனம் சரியாக உள்ளதா? உள்ளிட்ட பலவற்றை சரிபார்த்துக்கொள்ளலாம். இல்லையென்றால் அதற்கு உரிய படிவத்தை அந்த முகாமில் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து அவர்களிடம் கொடுக்க வேண்டும். இந்த முகாம் நவம்பர் 10-ந் தேதி வரை (வேலை நாட்களில் மட்டும்) நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment