வேலூர் திருவள்ளுவர் சேவா சங்கம் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான பேச்சு போட்டிகள் வருகிற 17–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வேலூர் டவுன் ஹாலில் நடக்கிறது.
இதில் ஒரு பள்ளிக்கு 3 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவர்கள் தங்களுடைய பெயரை வருகிற 16–ந் தேதிக்குள் வேலூர் சலவன்பேட்டை, எடத்தெரு பின்புறம் உள்ள திருவள்ளுவர் சேவா சங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு அன்று பிற்பகல் 2 மணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.
ஏற்பாடுகளை திருவள்ளுவர் சேவா சங்க நிறுவன தலைவர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
No comments:
Post a Comment