மகிழ்ச்சி தரும் தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்தின்றி பட்டாசு வெடிப்பது எப்படி? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 19, 2014

மகிழ்ச்சி தரும் தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்தின்றி பட்டாசு வெடிப்பது எப்படி?

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீக் காயங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள்தான் அதிகளவில் பட்டாசு விபத்தில் சிக்குகின்றனர். இதற்கு காரணம், ஆர்வம் காரணமாக பட்டாசுகளை கையில் பிடித்து வெடிப்பது மற்றும் தூக்கியெறிவது போன்றவற்றில் ஈடுபடும்போது விபத்து ஏற்படுகிறது. சிறுவர்களை பொறுத்தவரை அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், கம்பி மத்தாப்பு போன்ற சிறு விபத்துகளில் கை மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களை பொறுத்தவரை தாவணி மற்றும் சுடிதார்போன்ற
உடைகளில் தீ பிடித்து காயங்கள் ஏற்படுகிறது.
பட்டாசு வெடிக்கும்போது..
* பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான காட்டன் ஆடைகளை அணிய வேண்டும்.
* குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் உடனிருந்து கவனிக்கவேண்டும்.
* வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடக்கூடாது.
* அதிக சத்தத்தை எழுப்பும் அணுகுண்டு போன்ற வெடிகளை தவிர்க்க வேண்டும்.
* குடிசை பகுதிகள் அருகே பட்டாசு, குறிப்பாக ராக்கெட் உள்ளிட்டவற்றை வெடிக்கக்கூடாது.
* கண்களுக்கு வெகு தூரத்தில் இருந்துதான் புஸ்வாணம், சக்கரம், கம்பி மத்தாப்பு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
* வீட்டிற்குள் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது.
* திறந்தவெளியில் வைத்துத்தான் வெடிக்க வேண்டும்.
* வெடிக்காத வெடிகளை ஒரே இடத்தில் குவித்து தீ வைத்து எரிக்கக்கூடாது.
* பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்துக்கொள்ளவேண்டும்.
காயத்துக்கு பின்னர்...
* பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் உடனடியாக தண்ணீர் ஊற்றவேண்டும். ஏனென்றால் தண்ணீர் வெப்பத்தின் தாக்கத்தை தணித்து தீக்காயம் அதிகளவு ஏற்படாமல் தடுக்கும்.
* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் இங்க் அல்லது மண் போன்றவைகளை தடவக்கூடாது.

No comments:

Post a Comment