ஆசிரியர் பணியிடம் -ஆர்ப்பாட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 6, 2014

ஆசிரியர் பணியிடம் -ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப கல்வி முதல், ஆராய்ச்சி கல்வி வரை, கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும். கல்வி கடன்களையும், கல்வி உதவி தொகையையும் தாமதமின்றி வழங்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் பொது சுகாதார கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு, மாணவர் பெருமன்றத்தின் மாநில துணை செயலாளர் அருள்ராஜன் தலைமை வகித்தார்.

No comments:

Post a Comment