பள்ளி மாணவ–மாணவிகளுக்கு டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா அறிவுரை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 12, 2014

பள்ளி மாணவ–மாணவிகளுக்கு டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா அறிவுரை


வேலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற கூட்டம் 
பள்ளி மாணவ–மாணவிகளுக்கு டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தடுத்தல், டெங்கு நோய் தடுத்தல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சபிதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மழை நீர் தேங்காமல்...
வேலூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். அனைத்து துறை உயர் அதிகாரிகள், தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் மழை காலத்தில் ஏற்படும் நோய் தொற்று குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் விவரிக்க வேண்டும். இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண்களை, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
மழைக்காலங்களில் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் இணைப்புகள், மின் வயர்கள் சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஊராட்சிகளில் உள்ள ஊரணிகள் சுத்தமாக வைக்க வேண்டும். பேருந்து நிலையங்கள், மருத்துவ மனைகள், கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் தண்ணீரை அதிக நாட்கள் தேக்கி வைக்காமல், உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் கொசு ஒழிப்பு, புகை தெளிப்பான் வைத்திருந்து தினமும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும்.
மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு
சனி, ஞாயிறு நாட்களில் பள்ளி, கல்லூரிகளில் நோய் தொற்று பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும். வீடுகளில் இருக்கும் உடைந்த பானைகள், தேங்காய் மட்டைகள், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆசிரியர், மருத்துவர்கள் பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு டெங்கு நோய், காய்ச்சல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும். மழைக்காலத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மருந்துகள், உணவு ஏற்பாடு, இருப்பிட வசதிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், இணை இயக்குனர்கள் சோமசுந்தரம் (சுகாதாரம்), மணிமேகலை (மருத்துவம்), உதவி கலெக்டர் பட்டாபிராமன், முதன்மை கல்வி அலுவலர் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment