அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 12, 2014

அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு.

 அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கான பரிந்துரை பட்டியலைதகுதியுள்ள பதிவுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்,' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் புதிதாக அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி. வயது வரம்பு, 1.7.2014 நிலையில்முற்பட்ட வகுப்பினருக்கு, 30 வயதும், பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கு, 32 வயதும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 35வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கல்வித்தகுதியாக மேல்நிலைக்கல்வி, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த ஓ.சி., பிரிவினரைத் தவிர்த்து, இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான உத்தேச பரிந்துரை பட்டியல் மற்றும் பதிவு மூப்பு விவரங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பரிந்துரைப் பட்டியலில் ஆதரவற்ற விதவைப் பிரிவைச் சேர்ந்த அனைத்து பதிவுதாரர்களும் முன்னுரிமை அற்ற பிரிவில், எஸ்.சி.ஏ., 3.2.1993, எஸ்.சி., 3.8.1984, பி.சி.எம்., 6.6.1991, எம்.பி.சி., 22.6.1988, பி.சி.,11.7.1984, ஓ.சி.,19.5.1986 தேதி வரை பதிவுசெய்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தகுதியுடையவர்கள் வரும், 15ம் தேதிக்கு முன் பரிந்துரைப் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பட்டியல் விடுபாடு திருத்தம்வேண்டுவோர், 15ம் தேதிக்கு முன், உரிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment