வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டம்:- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 23, 2014

வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டம்:-

பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்வி கூடத்தில் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், சான்றிதழ், எம்.சி.ஏ., பி.எட்., எம்.எட்., என, 200க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள 350 கல்வி மையங்களில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தொலைமுறை கல்வி முறையில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்
சேர்க்கை, கடந்த ஜூலை மாதம் முதல் நடந்து வருகிறது; வரும் 31ம் தேதி நிறைவடைகிறது. இதில், வேலைவாய்ப்பு படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். எனவே, பல்வேறு வேலைவாய்ப்புகள் சார்ந்த புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்விக்கூட இயக்குனர் கோவிந்தராஜ் கூறியதாவது:
சமீபத்தில் தொலைமுறை கல்விக்கூட படிப்புகளுக்கு மாணவர்கள் இடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, எம்.பி.ஏ., லாஜிஸ்டிக் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய தொழிற்படிப்புகளில் மாணவர்கள் அதிகம் சேர்க்கை புரிந்து வருகின்றனர். தவிர, ஆங்கில இலக்கியம், உளவியல், கம்ப்யூட்டர் அறிவியல், இதழியல், கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல் பாடங்களுக்கும் அதிகளவில் விண்ணப்பங்கள் வருகின்றன. வரும் கல்வியாண்டுகளில் தொலைமுறை கல்விக்கூட மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, பல்வேறு வேலை வாய்ப்புகள் சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உயர்கல்வி முறையில் சீர்திருத்தம்!
பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவர் தேவராஜ் சமீபத்தில் தனியார் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், "புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு உயர்கல்வி முறையில் சீர்திருத்தம் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் கல்வி முறையில் மாற்றம்செய்ய யு.ஜி.சி., நடவடிக்கை எடுத்துவருகிறது. அதில், தொழில்சார்ந்த திறமைகளை வெளிப்படுத்தும் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment