தொழில்முனைவோருக்கு இலவச ஆலோசனை முகாம்
பாரதிய யுவ சக்தி அறக்கட்டளையின் சார்பில், தொழில் முனைவோர்களுக்கு இலவச ஆலோசனை முகாம் சென்னை வேளச்சேரியில் வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் இந்த ஆலோசனை முகாமில் பங்குபெறலாம்.
இதில், தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கடன் பெற வழிவகை செய்யப்படும்.
வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணியளவில் "பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை, இந்திய தொழில் கூட்டமைப்பு, 98/1, வேளச்சேரி பிரதான சாலை, கிண்டி, சென்னை - 600 032.' என்ற முகவரியில் தொழில் முனைவோருக்கான இலவச ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.
மேலும் தொடர்புக்கு: 044 - 42444555.
நன்றி -தோழர் ஆசிரியர் குரல்
No comments:
Post a Comment