ஆசிரியர்கள் கல்வித் தரம் அன்றும்-இன்றும்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 14, 2014

ஆசிரியர்கள் கல்வித் தரம் அன்றும்-இன்றும்:

நம் மாநிலத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு நடத்திய எஸ்.எஸ்.ஏ. எனும் கல்வித் திட்ட இயக்ககம், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட கல்வித் திறமை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாம்.
அதைச் சரி செய்யும் வகையில், அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தினமும் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி,
அவர்களது வாசிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாம்.
இந்த உத்தரவை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் எதிர்த்துள்ளதாம். காரணம், தற்சமயம் கிராப்புறங்களில் காலை 9.30 மணிக்கு பள்ளிகள் துவங்கி, மாலை 4.30 மணிக்கு முடிகிறது.
தினமும் 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகளைக் கூடுதலாக நடத்த வேண்டுமெனில், காலை 8.30 மணிக்குத் துவங்கி மாலை 5.30 மணி வரை பள்ளிகள் இயங்க வேண்டும். கிராமப்புறங்களில் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் நெடுந்தொலைவு பேருந்திலும், சைக்கிளிலும், நடந்தும் வரும் மாணவர்களுக்கு இது பெரிய சிரமமாகிவிடும் என ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் சிறப்பான கல்வியைப் பெறும் மாணவர்களால்தான் உருவாகும் என்பது உலகெங்கிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அதுபோன்ற வளர்ச்சியை சுதந்திர இந்தியாவில் உருவாக்கிக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு என்பது சரித்திர உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் காலத்தில் அது நடந்தேறியது.
அந்தக் கால கட்டத்தில் மாணவனாக இருந்த என் போன்றவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த ஓர் உண்மை, எங்களது திறமையை வளர்த்து விட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளில் அவற்றை பாடமாகப் போதித்து எங்களை உருவாக்கவில்லை என்பதுதான்.
கிராமத்தில் தனியார் பள்ளிகளில் படித்த காலத்தில் எங்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின்படி எல்லாப் பாடங்களையும் மிகவும் தெளிவாக போதித்து வந்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்கிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வந்தார்கள் என்பது முக்கியமான அம்சம்.
ஒரு வகுப்பில் எந்த அளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பட்டியல் எல்லாப் பள்ளிகளிலும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அதை அதிகாரி பள்ளிக்கு வந்து பார்த்துக் கொள்வார்.
பின், ஏதேனும் ஒரு வகுப்பிற்குச் சென்று பாடத்தில் கேள்விகளைக் கேட்டு மாணவர்கள் எந்த அளவிற்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை கணிப்பார்கள்.
மாணவர்கள் சரியான பதில்களைக் கூறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை சரியாகப் போதித்திருக்கிறார்கள் என்ற முடிவிற்கு அதிகார்கள் வருவார்கள். அப்படியல்லாமல் கேள்விக்கு மாணவர்களால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லையென்றால் ஆசிரியர் கண்டிக்கப்படுவார் எனும் நிலைமை இருந்தது.
நிறைய ஆசிரியர்கள் தாங்களாகவே முன்வந்து மாணவர்களை சிறந்த முறையில் பாடங்களைப் படிப்பவர்களாகவும், நூலகங்களில் உள்ள புத்தகங்களைப் படித்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்பவர்களாகவும் உருவாக்குவார்கள்.
ஒரு வகுப்பிற்கு வரும் ஆசிரியர்களில் யார் சிறந்த முறையில் பாடம் எடுக்கிறார் என்ற விவாதம் மாணவர்களின் மத்தியில் நடந்தேறி, பெற்றோர் மூலமாக ஊர் முழுக்கவும் பரவி, ஆசிரியர்கள் மத்தியிலேயே இந்த சிறப்பான போதிக்கும் குணாதிசயம் ஒரு போட்டியாகவே உருவாகிவிடும்.
தவிரவும், ஓர் ஆசிரியர் தனது வகுப்பில் பயிலும் மாணவர்களில் பலருக்கும் பாடத் திட்டங்களில் இல்லாத பொது அறிவு விவரங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் நூலகங்களுக்குச் சென்று குறிப்பிட்ட புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தையும் வளர்த்து விடுவார்கள். இந்த நடைமுறை கல்லூரிகளில் இருப்பது மிகவும் அவசியமாகிறது.
தற்போது நமது நாட்டின் கல்லூரிகளில் பட்டங்கள் பெற்று வேலைக்குச் செல்லும் பல பொறியாளர்கள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் மேலாளர் பதவியிலிருப்பவர்களின் அறிவுத்திறமையை ஆராய்ந்த ஓர் ஆராய்ச்சி நிறுவனம், அவர்கள் மிக குறைந்த அளவு கூட பொது அறிவு மற்றும் ஆங்கில அறிவு உடையவர்களாக இல்லை எனும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
கல்லூரி ஆசிரியர்கள் பலரும் ஏதோ கடமைக்கு தங்கள் வேலையைச் செய்து மாதச் சம்பளத்தை பெற்றுக் கொண்டு ஆசிரியர் தொழிற்சங்கங்களை அமைத்துக் கொண்டு தங்கள் சம்பள உயர்வுக்காக போராடும் சூழ்நிலை எல்லா இடங்களிலும் உருவாகியுள்ளது.
உயர் கல்வியில் மிக உயர்ந்த நிலையில் உள்ள மேலைநாடுகளில் கல்லூரி ஆசிரியர் வேலைக்கு வருபவர்கள், அந்த வேலையில் உள்ள தனித்தன்மையான அறிவு சார்ந்த விவரங்களைப் பாடமாக மாணவர்களுக்கு போதிப்பதையும், நிறைய விவரங்களை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிப்பதையும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆர்லிங்க்டன் பல்

No comments:

Post a Comment