Special Article : 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்யாமல் இறுதிப்பட்டியல் வெளியிடுவதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா? - விளக்க கட்டுரை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 21, 2014

Special Article : 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்யாமல் இறுதிப்பட்டியல் வெளியிடுவதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா? - விளக்க கட்டுரை

கடந்த மாதம் செப்டம்பர் 25 அன்று அரசாணை எண் 25 5%மதிப்பெண் தளர்வை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது...
ஆனால் இன்று வரை அத்தீர்ப்பின் நகல் வந்து சேரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறி வருகிறது...

இதற்கிடையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் இரண்டாம் பட்டியல் வெளிவந்து அதில் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சிபெற்றவர் இடம் பிடித்துள்ளனர் என ஒருசாரார் குமுறுகின்றனர்...

நீதிமன்ற தீர்ப்பில் பணிநியமன ஆணை பெற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஆகவே தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன் இறுதிப்பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வு முடித்துவிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிடுகிறதோ??

அவ்வாறு தேர்வுப்பணிகளை முடித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயாது ஏனெனில் இன்னும் நீதிமன்ற ஆணை கிடைக்கவில்லை...
நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த வெகுநாள் கழித்தும் தீர்ப்பின் நகல் கிடைக்காததன் மர்மம் தான் என்ன???

No comments:

Post a Comment