"இந்த காலத்துல எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பத்தரதே இல்லை" என்று அலுத்துக் கொள்ளும் சங்கத்தைச் சேர்ந்தவர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி! வருகிற 2015-ம் ஆண்டில் இந்தியாவில் வேலை செய்யும் பணியாளர்களின் சம்பள உயர்வு 11 சதவிகிதமாக இருக்குமாம்.
இஏசி இன்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில், 2015-ல் பணியாளர்களின் சம்பள உயர்வு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சர்வே ஒன்றை மேற்கொண்டது. இந்த சர்வேயில் பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவற்றுக்கு அடுத்து நம் நாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பணியாளர்களுக்கு 2015-ம் ஆண்டில் 12% சம்பள உயர்வு இருக்கும் என இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. நாட்டின் பணவீக்க அடிப்படையில் இந்த சர்வே மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனம், பணவீக்கம் குறையும் பட்சத்தில் பணியாளர்களின் சம்பள உயர்வுக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது. ஒருவேளை 2015-ல் பணவீக்கமானது அதிகமானால் பணியாளர்களின் சம்பள உயர்வு பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்திற்கும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்படும். முதல் இடத்தை வியட்நாம் பிடித்துவிடும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
இந்த தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தை சைனாவும், தாய்லாந்து, வங்காளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடத்தை பிடிக்கும் என்று இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment