இதுவரை நீங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தனைக்கு தான் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. இனி காசோலையை பயன்படுத்தி பனம் எடுப்பவருக்கும், பணம் கொடுப்பவருக்கும் பரிவர்த்தணை முடிந்தவுடன் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்கள் அளிக்கப்பட உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் காசோலையை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் அளவை குறைக்கவும், வாடிக்கையாளர்கள் தங்கள் பரிமாற்றத்தை பாதுகாப்புடனும் செய்ய இந்த புதிய வழிமுறை வழிவகுக்கும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அதிக தொகை மீதான பணபரிமாற்றத்துக்கு காசோலை வழங்கியவரிடம் இருந்து ஒப்புதல் பெற தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உறுதி செய்து கொள்ளவும் வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுரை வழங்கியுள்ளது.
புதிய கணக்குகள் தொடங்குபவர்களுக்கு நேரடியாகவும், பழைய கனக்கு உள்லவர்களுக்கு அவர்களது கேஒய்சி தகவலை வைத்தும் வழங்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment