பிறமொழி பாட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் 8–ந் தேதி நடக்கிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 6, 2014

பிறமொழி பாட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் 8–ந் தேதி நடக்கிறது

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களில் தெரிவு செய்யப்பட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது ஆகிய சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 8–ந் தேதி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு இணைய தளம் மூலமாக நடைபெறும்.
இந்த கலந்தாய்வின் சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 144 பணிநாடுநர்கள் பங்கேற்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் இருப்பிட முகவரி குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் 8–ந் தேதி அன்று காலை 9.00 மணிக்கு, தங்களது அசல் கல்விச் சான்றுகள் மற்றும் 2 நகல்களுடன் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment