பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நாளை மறுதினம் தொடக்கம் மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எழுத செய்வது எப்படி? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 11, 2014

பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நாளை மறுதினம் தொடக்கம் மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எழுத செய்வது எப்படி?


வேலூர், :தேர்வுகளை அச்சமின்றி மாணவ, மாணவிகளை எழுத செய்வது எப்படி என்பது குறித்து பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நாளை மறுதினம் தொடங்கி வருகிற 13ம் தேதி வரை அளிக்கப்பட உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேதி
பாடம் பயிற்சி மையம் ஒன்றியங்கள்
10.11.2014 அறிவியல் அ.ஆ.மே.நி.ப சோளிங்கர் அரக்கோணம்,
நெமிலி, சோளிங்கர்

அ.ஆ.மே.நி.ப வாலாஜா காவேரிப்பாக்கம்,
வாலாஜா, ஆற்காடு
அ.ஆ.மே.நி.ப பெருமுகை திமிரி, வேலூர்

11.11.2014 அறிவியல் அ.ம.மே.நி.ப அணைக்கட்டு கணியம்பாடி, அணைக்கட்டு
அ.ம.மே.நி.ப நெல்லூர்பேட்டை காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம்
அ.உ.நி.ப, அகரம்சேரி மாதனூர், பேரணாம்பட்டு,
ஆலங்காயம்

12.11.2014 சமூகஅறிவியல் அ.ஆதிதிராவிடர் மே.நி.ப ஆற்காடு, வேலூர்,
பெருமுகை கணியம்பாடி, அணைக்கட்டு
அ.ஆ.மே.நி.ப சோளிங்கர் அரக்கோணம், நெமிலி,
சோளிங்கர்
அ.ஆ.மே.நி.ப வாலாஜா காவேரிப்பாக்கம், வாலாஜா,
திமிரி

13.11.2014 சமூகஅறிவியல் அ.ம.மே.நி.ப காட்பாடி, குடியாத்தம்,
நெல்லூர் பேட்டை கே.வி.குப்பம், மாதனூர்,
பேரணாம்பட்டு
அ.ஆ.மே.நி.ப, திருப்பத்தூர் ஆலங்காயம், திருப்பத்தூர்,
கந்திலி, ஜோலார்பேட்டை,
நாட்றம்பள்ளி.

அதன் விவரங்கள் வருமாறு:கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் பாடங்களில் மாணவர்களை அச்சம் இல்லாமல் தேர்வுகளை எப்படி எழுத செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள் பாட புத்தகத்துடன் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி தெரிவித்தார். 

No comments:

Post a Comment