செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது துவங்கி வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது, ஹெல்த் செக்கப் என அனைத்துக்கும் இன்று ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இப்படி நமது தேவைகளுக்குப் பயன்படும் ஆப்ஸ்களுக்கு பின்னால் அதிர்ச்சியளிக்கும் விஷயமும் உள்ளது... நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் போலி எனில், நம்மைப் பற்றிய விவரங்கள் திருடப்பட
வாய்ப்பு இருக்கிறது.
போலி ஆப்ஸ்கள் என்பவை, நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை போன்ற வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் உருவாக்கப்படுபவை. உதாரணமாக, ஃபேஸ்புக் ஆப்ஸ் போன்ற அமைப்பிலேயே பல ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் நமது ஆப்ஸ் ஸ்டோரில் இருக்கும். இவையெல்லாமே ஒரிஜினல்தானா என்றால், இல்லை. அந்த ஆப்ஸ் மூலம் லாக் இன் செய்யும்போது நமது கணக்குக்குள் செல்லும். ஆனால், அதேசமயம் வேறு ஒரு இடத்தில் நமது கணக்கு விவரங்கள் பதியப்பட்டு திருடப்பட வாய்ப்புள்ளது.
சமூக வலைதளம் மட்டுமல்ல... வங்கி தொடர்புடைய ஆப்ஸ்களோ, பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், பெர்சனல் விஷயங்களைப் பதிவு செய்திருக்கும் ஆப்ஸ்களோ போலிகளாக இருந்தால்... பெர்சனல் விஷயங்களின் திருட்டு விபரீதமாகும். இன்னொருபுறம், நம் விவரங்கள் விளம்பரங்களுக்காகவும் விற்கப்படலாம். அதாவது, என்றோ ஒரு ஹெல்த் செக்கப் ஆப்ஸில் நம் மின்னஞ்சல் முகவரியை அளித்திருப்போம். சில நாட்களில், ஒரு ட்ரெட்மில் இயந்திர நிறுவனத்திடம் இருந்து நமக்கு வரும் மின்னஞ்சல். காரணம், திருடப்பட்ட நம் விவரங்கள் அந்த நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கும்.
தப்பிக்க என்ன வழி?

Thanks sir useful information
ReplyDeleteThanks sir useful information
ReplyDelete