ஆதார் அடையாள அட்டைக்கு உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்களுக்காக,ஒவ்வொரு தாலுகாஅலுவலகத்திலும்,நிரந்தர ஆதார் பதிவு மையம் திறக்கஇருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஆதார்' எனும் தேசிய அடையாளஅட்டை தயாரிப்பதற்காக, கைரேகை,கண் விழி மற்றும் புகைப்படம்எடுக்கும் 'பயோமெட்ரிக்' முகாம்,நாடு முழுவதும் நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில், 15.42 லட்சம்பேரின் உடற்கூறுகள் செய்யப் பட்டுள்ளனபதிவு.விடுபட்டோருக்கான முகாம், பிப்., மாதம் துவங்குமென
அறிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாக,முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா?விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால்,ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: கிராமம் வாரியாக நடக்காமல்,ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும், ஒன்று அல்லது இரண்டுஆண்டுகளுக்கு, ஆதார் அட்டைக்கான, நிரந்தர பதிவு முகாம் செயல்படும். ஒவ்வொரு தாலுகாவிலும், தலா இரண்டு கம்ப்யூட்டர்கள் பொருத்தி, பணியாளர் நியமித்து, ஆதார் அட்டைக்கான பதிவு முகாம் நடத்தப்படும். உத்தேசமாக, வரும் ஜன., மாதத்தில் இருந்து, நிரந்தர பதிவு முகாம் துவங்க வாய்ப்புள்ளது. ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம், என்றனர்.
No comments:
Post a Comment