மாநிலம் முழுவதும் 2015ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடம் செய்முறை தேர்வாக மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 19, 2014

மாநிலம் முழுவதும் 2015ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடம் செய்முறை தேர்வாக மாற்றம்

மாநிலம் முழுவதும் 2015ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடம் செய்முறை தேர்வாக மாற்றம் செய்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மேல்நிலை பொதுத்தேர்வில், கணிதம், அறிவியல், கணினியில் தொழிற்கல்வி என பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சு பாடம் 1978-79ம் கல்வி ஆண்டு முதல் எழுத்துமுறை பாடமாக இருந்தது. இப்பாடம் அனைத்தும் செய்முறையாக படிப்பதால் தற்போது மார்ச் 2015ம் கல்வியாண்டு முதல் செய்முறை பாடமாக மாற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அனைத்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு 2015ம் கல்வியாண்டில் தொழிற்கல்வி பாடம் செய்முறை தேர்வாக மாற்ற இதற்கான ஆணையும் வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் தொழிற்கல்வி பாடம் செய்முறை தேர்வாக மாற்றப்பட்டுள்ளதை, மாணவர்களிடம் தெரிவித்து, அதற்கேற்ப கற்பிக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment