சர்வதேச சமுத்திரத்தில் மிதக்கும் 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் துண்டுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 12, 2014

சர்வதேச சமுத்திரத்தில் மிதக்கும் 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் துண்டுகள்

 இந்திய பெருங்கடல் உள்ளிட்ட சர்வ தேச சமுத்திரத்தில், 5 லட்சம் கோடிக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் மிதந்து வருவதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் எடை, 2 லட்சத்து 70 ஆயிரம் டன்னாகும்.கடந்த 2007 - 13க்கு இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில், ஆறு நாடுகளில், 24 ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஐந்து மிதவெப்ப மண்டல சுழிப்பகுதிகள், ஆஸ்திரேலிய கடற்கரை, வங்காள விரிகுடா மற்றும் மத்திய தரைக்கடல்
பகுதிகளிலிருந்து அதிகளவில் தகவல்கள் திரட்டப்பட்டன. அதன் அடிப்படையில், உலக கடற்பரப்புகளில், குறைந்தபட்சம், 5.25 லட்சம் கோடி பிளாஸ்டிக் துண்டுகள் மிதப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் எடை, 2 லட்சத்து 70 ஆயிரம் டன் என, கணக்கிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, பெரிய அளவிலான பிளாஸ்டிக் துண்டுகள், கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும், சிறிய வடிவிலான மைக்ரோபிளாஸ்டிக்குகள் கடலின் தொலைதூர பகுதிகளிலும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment