அறிவியல் பாடங்களுக்கு 50 தலைப்புகளில் விடியோ - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 6, 2014

அறிவியல் பாடங்களுக்கு 50 தலைப்புகளில் விடியோ

தமிழகத்திலுள்ள பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை விளக்குவதற்காக 50 தலைப்புகளில் விடியோ படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தலைப்பிலும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் வரை இந்தப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

வேதியியல் பரிசோதனைகள், இயற்பியல் விதிகள் ஆகியவை எடுத்துக்காட்டுகளுடன் இந்தப் படங்களில் விளக்கப்படுகின்றன. இந்த விடியோ படங்கள் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த மாத இறுதிக்குள் இந்தப் படங்கள் தயாரிக்கப்பட்டு விடும். அதன்பிறகு, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை மூலம் இணையதளத்தில் இந்தப் படங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment