மனம் தளர வேண்டாம் ! நிச்சயம் ஊதிய மாற்றத்தை பெற்று தரும் -தொடர்ந்து டாட்டா வுடன் இணைந்து இருங்கள் .
மீண்டும் தமிழக அரசு ஒரு நபர் குழு திரு.ராஜீவ் ரஞ்சன் இ ஆ ப அறிக்கை மற்றும் ஊதிய குறைதீர்க்கும் பிரிவு திரு.கிருஷ்ணன் இ ஆ ப அறிக்கை உண்மையானது என்றும் டிப்பமோ கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் கோர முடியாது எனவும் மேலும் அரசுக்கு ரூ 600 கோடி வருட நிதி செலவு ஏற்படும் என காரணம் கூறி மறுத்து உள்ளார்கள்
இதை எதிர்த்து நமது சங்கம் மீண்டும் உடனடியாக நீதிமன்றத்தில் அப்பீல் செய்திட உள்ளது .நமது ஊரிமையை தற்போது விட்டு விட்டல் நம் எதிர் காலம் அவ்வளவு தான் .இனியும் இடைநிலை ஆசிரியர் சமுகம் ஊணர்வடையா விட்டல் அடுத்த ஊதிய குழுவில் நாம் அழிந்து விடுவோம் .இனிமேல் தான் நாம் அனைவரும் நம் சங்கத்திடம் உள்ள ஆவணங்களின் படி ஊரிமையை நிலை நாட்டிட மனம் தளராமல் மிக வேகமாக போராட வேண்டும்
-டாட்டா கிப்சன்
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறு' ஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment