குழப்பம் நீடிப்பதால் வங்கிகளை முற்றுகையிடும் மக்கள்: காஸ் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி?- அதிகாரிகள் விளக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 12, 2014

குழப்பம் நீடிப்பதால் வங்கிகளை முற்றுகையிடும் மக்கள்: காஸ் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி?- அதிகாரிகள் விளக்கம்

சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க டிச.31ம் தேதி இறுதி நாள் கிடையாது என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
           சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெற நான்கு வகையான படிவங்கள் விநியோகிக்கப்படுகிறது. இவற்றைப் பூர்த்தி செய்து எரிவாயு விநியோகஸ்தர்களிடம் அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. மேலும் http://petroleum.nic.in/dbt/index.php என்ற இணையதளம் மூலமாகவும் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள் www.rasf.uiadai.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 1800-2333-555 என்ற கால் சென்டர் மற்றும் ஐவிஆர்எஸ் எஸ்எம்எஸ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் www.MyLPG.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
2015, மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் மானியம் கிடைக்கும். அப்படியும் தவறும்பட்சத்தில், ஏப்.1ம் தேதி முதல் ஜுன் 31ம் தேதி வரை இறுதி கெடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மானியம் பெற அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கணக்கு தொடங்கலாம். 

No comments:

Post a Comment