பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 20, 2014

பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு

பாலிடெக்னிக்குகளுக்கான பாடத் திட்டத்தை வருகிற 2015-16-ஆம் கல்வியாண்டில் மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறன், செய்முறைப் பயிற்சி ஆகியவற்றை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான பாடத் திட்டம் வரும் 2015-16-ஆண் கல்வியாண்டில் மாற்றியமைக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக, முதலாம் ஆண்டு பாடத் திட்டம் தலைசிறந்த வல்லுநர் குழுவால் வரையறுக்கப்பட்டு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ற்ங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், தொழில்துறை மாணவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை    dote.mscheme@gmail.com    என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment